1.4.05

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
படம்: அலைபாயுதே
இசை: ஏ. ஆர். ரஹ்மான


பாடல் ஒலி வடிவத்தில்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)

18 comments:

Narain Rajagopalan said...

சோகம் கசியும் குரல், மழை வெளி, மிக அதிகபட்ச காற்று என நீளும் இந்த பாடலின் விஷவல் பிரமிக்க வைக்கும் விஷயம். இதேப் போன்றதொரு காற்றும், மழையும் சோகத்துடன் கூடிய இன்னொரு பாடல், "உயிரே, உயிரே (பம்பாய்)" நல்ல பாடல்.

Chandravathanaa said...

செல்வநாயகி
இப்பாடலை எனக்கும் மிகவும் பிடிக்கும். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல உள்ள ஒரு பாடல்.

நாராயணன் நீங்கள் சொல்வது போல சோகம் கசியும் குரல், மழை வெளி, மிக அதிகபட்ச காற்று என நீளும்....
வார்த்தையில் சொல்ல முடியாததொரு உணர்வலையை மனதுள் தோற்றுவிக்கும் பாடல்.
உயிரே பாடலிலும் ஓரளவு இந்தத் தன்மை உள்ளதுதான் எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலில் கூடிய சோகம் கசிவது போல இருக்கும்.

Sud Gopal said...

வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பினின்று எடுக்கப்பட்டு பின்னர் மெட்டமைக்கப்பட்ட மணிரத்தினத்திற்கு மிகவும் பிடித்த இந்தப் பாடல்,படமாக்கப்பட்ட விதமும் அருமை.

கேரளாவில் மழை என்று படிக்கும் போதெல்லாம் என் கண்களில் இந்தப் பாடல் காட்சி வந்து செல்லும்.

Ramya Nageswaran said...

அருமையான பாடல்.. நான் கேட்டால் நிச்சயம் அழும் பாடலில் இதுவும் ஒன்று!! இது கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் 'எங்கே எனது கவிதை' படம் கண்டுகொண்டேன் x 2

Chandravathanaa said...

சுதர்சன் , ரம்யா
இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடிய அந்தப் பாடல்களை என்னோடு சேர்ந்து நீங்களும் ரசிப்பதில் எனக்கு இனிய சந்தோசம்.

ரம்யா, நீங்கள் குறிப்பிட்ட எங்கே எனது கவிதை.... பாடலுக்காவே அப்படத்தை நான் பார்த்தேன்.
ஆனால் இவையெல்லாம் என்ன ராகத்தில் அமைந்துள்ளன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ரசிக்க மட்டுந்தான் தெரியும்.

Sud Gopal said...

ரம்யா மேடம்,
"எங்கே எனது கவிதை"பாடலும் இதே கீரவாணி ராகத்தில் அமைந்துள்ளது என்பது எனக்கொரு புதிய செய்தி.

வதனா அக்கா,
இந்தக் குறிப்பிட்ட பாட்டுக்காக இந்தத் திரைப்படம் பார்க்கப் போன உங்களுக்கு,இந்தப் பாடலைப் பார்க்கும் போது ஏமாற்றமே வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

கேட்க நல்லாவும் இருக்கும் இந்தப் பாடலை விஷூவலா சொதப்பி வச்சிருப்பாரு ராஜீவ் மேனன்.
இதப் பத்தி மேலும் தெரிஞ்சிக்க,
http://konjamkonjam.blogspot.com/2005_06_19_konjamkonjam_archive.html

Sud Gopal said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே//

எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து 'பிரிவில்லையே'

என்று வரும்

Anonymous said...

பாடலை நன்றாக கேளுங்கள்..

அதில் 'பிரிவில்லையே' என்று தான் வருகிறது.

முதல் சரணத்தில்

'ஒருபாதி'
'சரிபாதி'

'மறந்திருப்பேன்'
'இறந்திருப்பேன்'

என்று வருகிறது

2வது சரணத்தில்

'பிரிவில்லையே'
'எனக்கில்லையே'

என்று சரியாகத்தான் வருகிறது.

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

Nice song, thanks for making me remember !!!!

Chandravathanaa said...

நன்றி பாலா
எனது அனேகமான பதிவுகளில் nice... thanks... என்று இனிமையாக உங்கள் தடம் பதித்துச் செல்கிறீர்கள். இந்த நட்பு மனதுக்கு இதமாக இருக்கிறது.

Chandravathanaa said...

இந்தப் பாடலில் இடம்பெறும் சில சொற்களில் சில சந்தேகங்கள் எழுந்தன.
இன்றுதான் இப்பாடலை இணையத்தில் தேடி எடுத்து ஆறுதலாகக் கேட்க முடிந்தது.
பெயர் குறிப்பிடாதவர் குறிப்பிட்டது போல பிரிவில்லையே என்பதுதான் சரி போல உள்ளது.
jsri குறிப்பிட்ட ஆறுதாலா கூட எனக்கு மாறுதலா என்றுதான் கேட்கிறது.
முடிந்தவர்கள் கேட்டு விட்டு சரி எதுவெனச் சொல்லுங்கள்.

முடிந்தால் பாடலின் ஒலி வடிவத்தை இணைக்கிறேன்.

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டுப் பார்த்தேன்.
jsri குறிப்பிட்டது போல பிறிதில்லையே என்றுதான் கேட்கிறது.
கருத்தின்படி கூட அதுதான் சரியாக அமையும்.
ஆனால் பாடலில் இச்சொல் பிரிதில்லையே என உச்சரிக்கப் படுகிறது.
அதனால்தான் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

Chandravathanaa said...

நன்றி jsri
நீங்கள் சொல்வதுதான் சரி.
நான் பாட்டை மீண்டும் ஆறுதலாகக் கேட்டுப் பார்த்தேன்.
நீங்கள் சோல்வது போல ஆறுதலா என்ற சொல்தான் ம் முடன் சேர்ந்து மாறுதலா என்று ஒலிக்கிறது.

கார்திக்வேலு said...

One of the classics ,Thanks

Chandravathanaa said...

thanks karthikvelu