வரிகள் - பா.விஜய்
படம் - Autograph
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!
14 comments:
பாடல்: எவனோ ஒருவன் வாசிக்கிறான்
குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
I like the song "Ovvoru Pookalume". Whenever I am very frustrated, I listen to the song. The lyrics and music are very good which will soothe any tired person
ம் புதுப்பாடல்களைத் தான் எல்லோரும் எழுதுகின்றீர்கள். எனக்காக அக்பர் திரைப்படப் பாடலான ராஜசேகரா என் மேல் மோடி கொள்ளலாகுமா எனும் பாடலையும் காதல் கொண்டாலே பயம் என்ன உண்மைக் காதல் கொண்டாலே பயம் என்ன என்ற பாடலின் வரிகளை யாரும் தரமுடியுமா?
ஹரி
நீங்கள் எழுதிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
அப்பாடல் வெளிவந்த காலத்தில் அதைப் பிரதி பண்ணி வைத்து திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருப்பேன். அதை இங்கு தந்ததற்கு மிகவும் நன்றி.
நட்புடன்
சந்திரவதனா
Anonymous
உங்கள் கருத்துக்கு நன்றி. பெயரைத் தந்திருக்கலாமே.
சுமதி
தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் அக்பர் பாட்டைத் தருகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா
>>மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் அடைந்தால் நீ
எல்லாமே உரமாகும்!<<
இந்த வரி மட்டும் எனக்கு விளங்கவில்லை....
NONO
தோல்வியைக் கண்டு துவண்டு விடுவதும், துயர்களில் தளர்ந்து போவதும், அவமானத்தால் குறுகிப் போவதும் மனித மனத்தின் இயல்பு.
யாருக்குத்தான் தோல்வியில்லை. யாரைத்தான் துயரம் ஆட்கொள்ளவில்லை. யார்தான் அவமானங்களைச் சந்திக்கவில்லை.
அதனால் தோல்வியைக் கண்டு துவளாமல் அதை வெற்றியின் படியாக நினைத்து, துயர்களில் தளர்ந்து போகாமல் மனதைத் திடப் படுத்தி, அவமானத்தில் குறுகிப் போகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். இதைத்தான் பாட்டு சொல்ல முனைகிறது என நினைக்கிறேன்.
உறுதியிலோ முயற்சியிலோ ஒரு மனிதனுக்குத் தளர்ச்சி வரக் கூடாது. அதைத்தான் மனிதா உன் மனதைக் கீறி உறுதியையும் முயற்சியையும் விதையாகப் போடு. வரும் அவமானங்கள் எல்லாவற்றையும் அதற்கு உரமாக நினை. (அப்போது வெற்றி கிடைக்கும்.)என்று சொல்வதாக நான் பாடல் வரிகளின் கருத்தை எடுத்துக் கொண்டேன்.
இன்னொருவர் இன்னொரு விதமாகக் கருத்தை எடுக்கலாம்.
உங்கள் விளக்கத்துக்கு நன்றி நல்ல விழக்கம்!!!
>>மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் அடைந்தால் நீ
எல்லாமே உரமாகும்!<<
"அது அவமானம்,படு தோல்வி
எல்லாமே உரமாகும்" என்று நினைக்கிறேன்.
சுதர்சன் கோபால்
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_14.html
தகவலுக்கு நன்றி சுதர்சன்.
அதை மாற்றியுள்ளேன்.
nantri NONO
இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னால் ஒரு நேர்காணலில் இந்தப் பாடலானது முன்னர் சேரன் பாடுவது போன்று இருந்ததாகவும் பின்னர் அது சினேகாவிற்கு ஒதுக்கப்பட்டது எனவும் சினேகா குறிப்பிட்டிருந்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படம் ஆக்கப்பட்டது,தென்னிந்தியத் திரை உலகிற்கான ஃபிலிம்பேர் விருதுகளில் தமிழில் சிறந்த இசை அமைப்பாளர் விருது பெற்றது என்று தொடரும் இப்பாடலின் சாதனைகளில் ஒரு மகுடமாய் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகி விருதினையும்,சிறந்த பாடலாசிரியர் விருதினையும் பெற்றுள்ளது இந்தப்பாடல்.
தகவல் - சுதர்சன் கோபால்
i like this song, very nice
Post a Comment