15.11.04

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே!

படம் - காஞ்சித்தலைவன்
பாடல்வரிகள் - மு.கருணாநிதி
பாடியவர்- சி.எஸ்.ஜெயராமன் குழுவினருடன்

வெல்க நாடு வெல்க நாடு
வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு
செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

தாயின் ஆணை கேட்பதுக்கு
தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம்
காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா

குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை
வளங்குமடா நித்தம்
சென்று வா வென்று வா

மகிமை கொண்ட மண்ணின் மீது
எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா
வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள்
சென்று வா வென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - அவர்
ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா - அவர்
கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே

3 comments:

Chandravathanaa said...

வணக்கம் சொக்கன் மணியன்

எனது பதிவுக்கு வந்து உங்கள் கருத்தையும் தந்ததற்கு மிகவும் நன்றி.

நீங்கள் குறிப்பிடுவது முற்றிலும் சரியானதே. நான் கூடப் பல தடவைகள்கவிஞர்களின் திறனை எண்ணி வியந்திருக்கிறேன். நல்ல கவிதைகளைத் தந்த அவர்களை நாங்கள் மறந்து விடக்கூடாது. ஆனாலும் இந்தப் பாடலை ரசித்து முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு, இப்பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற முக்கியத்துவத்தை மறந்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

இப்பாடலை மேகலா பிக்சர்ஸ்சின் காஞ்சித்தலைவன் படத்துக்காக கருணாநிதி எழுதினார். பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது வடபுல சாளுக்கியச் சக்கரவர்த்தி புலிகேசி படையெடுத்ததையும், அதை பல்லவர்கள் முறியடித்ததையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1963இல் வெளிவந்த இப்படம் 18.10.1963இல் தணிக்கை செய்யப் பட்டது.

ஆனாலும் வெல்க காஞ்சி வெல்க காஞ்சி... என்று இப்பாடல் முதலில் எழுதப்படது என்ற விடயம் எனக்குப் புதிதே. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இப்படியான சுவாரஸ்யமான செய்தகிளைப் தொடர்ந்தும் தாருங்கள்.

சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி. படத்தின் பெயரை மாற்றியுள்ளென்.

நன்றியுடன்
நட்புடன்
சந்திரவதனா

சென்ஷி said...

சந்திரவதனா அவர்களுக்கு
மிக திறமையான முயற்சி...மேலும் தொடர வாழ்த்துக்கள்.
MP3 பாடல்களையும் இணைத்து வெளியிட முடியுமா?

Chandravathanaa said...

நன்றி சென்ஷி
முயற்சிக்கிறேன்.