27.5.08

வாசமில்லா மலரிது

படம்: ஒரு தலை ராகம்
இசை: T .ராஜேந்தர்
பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்


வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

5.4.08

தீயில் விழுந்த தேனா?

படம் : GOD FATHER
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்


தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?

(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

(தீயில்)

11.3.08

கண்களால் நான் வரைந்தேன்

படம்: மங்கள நாயகி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: வி.குமார்


ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

மார்கழி மாதம் என்றால்
ஆஆஆஆஆஆ ..
மார்கழி மாதம் என்றால்
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்

சுசீலா:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன்
கண்னனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன

ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
சுசீலா: தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

என்ன பார்வை உந்தன் பார்வை

படம் : காதலிக்க நேரமில்லை
குரல் : ஜேசுதாஸ், சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வி.ரா
நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா


என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..


என்ன பார்வை உந்தன் பார்வை
எனை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ணச் சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா....ஆ...

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்..

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய்

( என்ன )

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம்பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..

( என்ன )

10.2.08

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த

படம் : பாத காணிக்கை
குரல் : பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிகர்கள்: சாவித்திரி


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி

(எட்டடுக்கு)

1.11.07

சுட்டும் விழிச் சுடரே

படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹரிஸ் ஜெயராஜ்


பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

படம் : சென்னை 600028
பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு
இசை : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம் : வெங்கட்பிரபு


பல்லவி
=======
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)

சரணம்-1
=========
WarShip என்றும் நீரில் ஓடும்
SpaceShip என்றும் வானில் ஓடும்
FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோஹோஹோ
FriendShip என்றும் தெய்வம் என்று
Worship செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது
நண்பா வா.. ஹே (யாரோ யாருக்குள்)

சரணம்-2
=========
எங்கும் திரியும் இளமைத்தீவே
என்றும் எரியும் இனிமைத்தீயே
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா
என்னைக் கண்டா தன்னந்தனியா
எட்டிப் போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
நாட்டிலுள்ள கூட்டணி போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா ஹே.. (யாரோ யாருக்குள்)

இந்த நிமிடம் இந்த நிமிடம்

படம்: பள்ளிக்கூடம்
பாடியவர்: ஸ்ரீனிவாஸ், ஜனனி
இசை: பரத்வாஜ்
இய‌க்குநனர்: த‌ங்க‌ர்ப‌ச்சான்,



பல்லவி
=======

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
(இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

சரணம்‍‍‍‍‍ 1
========

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...


சரணம் 2
========

ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ


பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா

17.10.07

இது ஒரு பொன்மாலைப் பொழுது

'நிழல்கள்' - 1980
வரிகள் - வைரமுத்து
குரல் - பாலசுப்ரமணியம்


பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

தாலாட்டுதே வானம்

கடல் மீன்கள்(1981) - கமல்

தலைவன்:
தாலாட்டுதே!

தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

தாலாட்டுதே!

தலைவி:
அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

தலைவன்:
நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

தலைவி:
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்!

தலைவன்:
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்!

தலைவி:
எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே!

(தாலாட்டுதே...)

தலைவி:
இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

தலைவன்:
ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

தலைவி:
சொர்க்கத்திலே இது முடிவானது!

தலைவன்:
சொர்க்கம் என்றே இது முடிவானது!

தலைவி:
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே!

(தாலாட்டுதே...)

தாலாட்டுதே!