28.4.09

ஆடி வெள்ளி தேடி உன்னை

படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்


ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கி

பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்
பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

படம் - பாமா விஜயம்

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,

அசடா இருந்தா மறுப்பேளாம்,

ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா

அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு

என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல

பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு

நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா

எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்

தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு

எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

என்னத்த செய்வேள் - ஹாங்

சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -

அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -

ஆங் பல்ல உடப்பேன்

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

மதுரை அரசாளும் மீனாட்சி

படம்: திருமலை தென்குமரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், LR.ஈஸ்வரி, விஜயா
ராகம்: காபி


மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவள் அல்லால் ஏது கதி?
(மதுரை அரசாளும் மீனாட்சி)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே
(மதுரை அரசாளும் மீனாட்சி)

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
(மதுரை அரசாளும் மீனாட்சி)

....காபி ராக ஆலாபனை...
(மதுரை அரசாளும் மீனாட்சி)