19.4.09

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

படம்: நான் கடவுள்
பாடியவர் - மது கிருஷ்ணன்

பாடல் வரிகள் - இளையராஜா

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப் பாதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

கல்லை மட்டும் கண்டால்

படம்: தசாவதாரம்

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

இசைத்தமிழ் நீ செய்த

படம்: திருவிளையாடல்
பாடியவர்: T. R. மகாலிங்கம்

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை..

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..
வசைவருமே பாண்டி நாட்டினிலே..
இறைவா...
வசைவருமே பாண்டி நாட்டினிலே..
குழலி மணவாளனே உனது வீட்டினிலே..
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே

வெற்றி ஒருவனுக்கோ
மதுரை தமிழனுக்கோ..?

இசைத்தமிழ் நீ செய்த..

சிவலிங்கம் சாட்சி சொன்னக்
கதையும் பொய்யோ..!
மாமன் திருச்சபை வழக்குரைத்த
முறையும் பொய்யோ..!

பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பட்ட உன்னை..

பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன..?

தாய்க்கொரு பழி நேர்ந்தால்
மகற்கில்லையோ.. அன்னை
தமிழுக்கு பழி நேர்ந்தால்
உனக்கில்லையோ..
வேருக்கு நீரூற்றி
விளைக்கின்ற தலைவா...
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை

தோல்வி நிலையென நினைத்தால்

படம்: ஊமை விழிகள்
பாடல்: தோல்வி நிலையென நினைத்தால்


தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...


விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...