Showing posts with label வீடுவரை உறவு வீதி வரை. Show all posts
Showing posts with label வீடுவரை உறவு வீதி வரை. Show all posts

14.9.05

வீடுவரை உறவு வீதி வரை மனைவி

இப்பாடலும் தருமிக்காக

படம் - பாதகாணிக்கை
வரிகள் - கண்ணதாசன்.

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்

கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

(வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

(வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!

(வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு!

(வீடு)