26.9.05

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

குரல்: ஹரிஹரன்
வரிகள்: கலைக்குமார்
படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இசை: S.A.ராஜ்குமார்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

17.9.05

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!

தருமியின் விருப்பத்துக்காக

படம் : புதிய பறவை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே
ஹோ, இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே
ஓ, உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

14.9.05

வீடுவரை உறவு வீதி வரை மனைவி

இப்பாடலும் தருமிக்காக

படம் - பாதகாணிக்கை
வரிகள் - கண்ணதாசன்.

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்

கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

(வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

(வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!

(வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு!

(வீடு)

சட்டி சுட்டதடா கை விட்டதடா

தருமியின் விருப்பத்துக்கு

படம் - ஆலயமணி
இசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி
குரல் - சௌந்தரராஜன்
வரிகள் - கண்ணதாசன்


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

படம் - சிகரம்
பாடியவர் -K.J.Jesuthas
வரிகள் -
இசை - S.P. Balasubramaniam


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்


அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

சித்திரத்தில் பெண்ணெழுதி ...

படம்:
குரல்:ஜமுனாராணி
வரிகள்:
இசை :

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ!

காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு
கண்ணீர்தான் உன் வழியோ!

அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ!

மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு
வாய்த்த விதி இதுதானோ!

3.9.05

இலக்கணம் மாறுதோ

படம் - நிழல் நிஜமாகிறது
பாடியவர்கள் - வாணிஜெயராம் +

இலக்கணம் மாறுதோ
இலக்கியமானதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

(இலக்கணம்)

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான தாகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ

(இலக்கணம்)

மணியோசையென்ன இடியோசையென்ன
எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம்
பூர்வஜென்ம பந்தம்

(இலக்கணம்)

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்
திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ
விளக்கிவைப்பாயோ

(இலக்கணம்)