7.5.06

மேகத்தைத் தூது விட்டா

படம் : அச்சமில்லை அச்சமில்லை
குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா
பாடல் : வைரமுத்து
இசை : வி.எஸ். நரசிம்மன்
நடிகர்கள் : ராஜேஷ், சரிதா

சுசீலா :
மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?
எப்ப வந்து தரப்போற ?

ஓடுகிற தண்ணியிலே...
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ...?

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ

செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

மலேஷியா வாசுதேவன்:
அடி கிராமத்துக் கிளியே - என்
கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை புடிக்க வா மயிலே

சுசீலா :
கொடையுமில்ல படையுமில்ல
கூதலுக்கு ஆதரவா
தாவணிய நீ புழிய
தலை துவட்ட நான் வரவா ?

மலேஷியா வாசுதேவன்:
நீ நனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
அயித்த மகன் நான் புழிஞ்சா
அத்தனையும் தேன் வடியும்

சுசீலா :
ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

மலைத் தோட்டத்து குயிலு
இது உமக்காகப் பாடுதுங்க
ஆசையை நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க

மலேஷியா வாசுதேவன்:
அருவி போல அழுகிறேனே
அறிந்து கொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் தாளாதோ

சுசீலா :
வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ - ஒங்க
பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
பல்லு வெளக்கப் போறதெப்போ

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

நிலவே நீ சாட்சி..

படம் : நிலவே நீ சாட்சி
குரல் : பி.சுசீலா
நடிகை : கே.ஆர்.விஜயா

நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..

( நிலவே )

அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

( நிலவே )

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு

( நிலவே )

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

( நிலவே )

5.5.06

துயிலாத பெண் ஒன்று கண்டேன்

திரைப் படம்: மீண்ட சொர்க்கம்
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி


http://www.raaga.com/getclip.asp?id=999999026780


ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
ஓஹோ..

ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

4.5.06

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

படம் : காத்திருந்த கண்கள்
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை :
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி


வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

3.5.06

திங்கள் மாலை வெண்குடையான்

படம் : கரும்பு
குரல் : சுசீலா
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி


பாடலைக் கேட்க இங்கே

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

2.5.06

ஒரு கொடியில் இரு மலர்கள்

திரைப் படம்: காஞ்சி தலைவன்
பாடியவர்கள்: T.M..சௌந்தரராஜன்+பீ. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: ஆலங்குடி சோமு

டி.எம். எஸ்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

சுசீலா:
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா

டி.எம். எஸ்:
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக
என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

சுசீலா:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

சுசீலா:
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்

டி.எம். எஸ்:
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
நீ சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன்

சுசீலா:
ஒரு கொடியில்

டி.எம். எஸ்:
இரு மலர்கள்

சுசீலா:
பிறந்ததம்மா.. பிறந்ததம்மா

டி.எம். எஸ்:
அண்ணன் தங்கை

சுசீலா: உறவு முறை

டி.எம். எஸ்:
மலர்ந்ததம்மா.. மலர்ந்ததம்மா

இருவரும்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

1.5.06

காகித ஓடம் கடல் அலை மீது

படம் : மறக்க முடியுமா ?
குரல் : சுசீலா
பாடல் : மு.கருணா நிதி
இசை : ராமமூர்த்தி


காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

(காகித)

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

(காகித)

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

(காகித)

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

படம் : ராஜா
குரல் : TMS, சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

ஓ...ராஜா.....
ராஜா !

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா ?
காதல் கவிதை சொல்லு ராஜா...

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னைப் பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு

( நீ )

கொஞ்ச நேரம் என்னைத் தாலாட்டு
கொஞ்சும் போதும் என்னைப் பாராட்டு
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்

காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

வைரம் என்றே எனை நீ பாடு
வாங்கிக் கொள்வேன் அதைக் கையோடு
தந்தது பிறருக்குத் தெரியாது
சந்தித்த ரகசியம் புரியாது

நாளையும் மனம் உன்னைத் தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

படம் : பார்த்தால் பசிதீரும்
பாடியவர் : TMS


பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
(2)
நீ ஒருவனை நம்பி வந்தாயோ -இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
(2)

தாயாரைத் தந்தை மறந்தாலும் -தந்தை
தானென்று சொல்லாத போதும்
(2)
தானென்று சொல்லாத போதும்

ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.
(பிள்ளைக்கு...)

உள்ளோருக்கு செல்வங்கள் சொந்தம் -அது
இல்லாருக்கு உள்ளங்கள் சொந்தம்
(2)
இல்லாருக்கு உள்ளங்கள் சொந்தம்

இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
(பிள்ளைக்கு...)

30.4.06

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

படம் : மீண்ட சொர்க்கம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : டி.சலபதி ராவ்
நடிகை : பத்மினி


கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)