12.5.06

விழியே விழியே உனக்கென்ன வேலை

படம் : புதிய பூமி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
இங்கு நான்கு கண்களூம் உறவாட...

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா

(விழியே)

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும்

(விழியே)

7 comments:

G.Ragavan said...

நல்ல துள்ளல் மிகுந்த காதல் பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருகில் நின்றாலும் வரலாம்ம்ம்ம்ம்ம் என்று பாடுகின்ற வரிகள் ரொம்ப நன்றாக இருக்கும். நல்ல பாடல்களாக நினைவுகூர்கிறீர்கள் சந்திரவதனா.

Radha N said...

நம்பியாரும் எம்.என்.ராஜமும் இணைந்து பாடும் ஒரு பழைய காதல் பாடல் ஒன்றினை ஜெயா தொ லைக்காட்சியில் பார்த்தேன். பி.பி. சீனிவாசஸ் பா டியது என்று நினைக்கிறேன். பாடல் வரி சட்டென்று நினைக்கு வரவில்லை. இயன்றால் போ டுங்களேன்.

Sud Gopal said...

எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.இந்தப் பாடல் கொஞ்சம் கிறக்கத்தைத் தருவதாலோ.

நாகு சொல்லும் பாடல் "என்னை விட்டு ஓடிப் போக முடியுமா" என்று நினைக்கிறேன்.

//நல்ல பாடல்களாக நினைவுகூர்கிறீர்கள் சந்திரவதனா.//
அதே.அதே...

Chandravathanaa said...

றாகவன், நாகு, சுதர்சன் கோபால், யோகன்

உங்கள் வரவுகளுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
நாகு நீங்கள் கேட்ட பாடலை விரைவில் தர முயல்கிறேன்.
சுதர்சன், யோகன் நீங்கள தந்த தகவல்களுக்கும் நன்றி

Unknown said...

அது சபாஸ் மாப்பிளே அல்லது தாலி பாக்கியம் படத்தில் நம்பியாரும் ராஜமும் பாடுவது
கல்லூரி நண்பர்கள் நினைவுகளில் பாடுவதுபோல் வரும்
தொடக்கவரி நினைவில்லை இடையில் "நம்ம லிப்ஸ்டிக் மீனா என்ன ஆனா?" என்று நம்பியார் கேட்க "நம்ம மாலாவோடு சேர்ந்து அவளும் போனா" என்று பதில் வரும்

Unknown said...

நம்பியார் எம் என் ராஜம் பாடல் சபாஷ் மாப்பிள்ளே என்று நினைக்கிறேன்

Chandravathanaa said...

தகவலுக்கு நன்றி கதிர்நிலவன்!